திருக்குறளின் ஆழத்தால் திகைத்துப் போகிறேன் – ராகுல் காந்தி ட்வீட்

திருக்குறளின் ஆழத்தால் திகைத்துப் போகிறேன் – ராகுல் காந்தி ட்வீட்

“திருக்குறல்” படித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அண்மை காலமாக தேசிய தலைவர்கள் தமிழ் மொழியின் இலக்கியமான திருக்குறளை மேற்கோள்காட்டி பேசி வருகின்றனர்.அந்த வகையில் நேற்று பிரதமர் மோடி தமிழகம் மற்றும் புதுவைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்

” கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை “

என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேசினார். கல்வி எனும் அதிகாரத்தில், குறள் எண் 400-ல் இந்த குறள் இடம்பெற்றுள்ளது .

இதன் பின் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் “

என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார்.உழவு எனும் அதிகாரத்தில், குறள் எண் 1033-ல் இந்த குறள் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு தேசிய தலைவர்கள் தமிழ் மொழியின் இலக்கியம் குறித்து பேசி வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், “திருக்குறல்” படித்து வருகிறேன். அதன் ஆழத்தால் திகைத்துப் போகிறேன்.கேட்க, கேட்க, உங்கள் காதுகள் வழியாக புரிந்துகொள்ளும்.தானியத்தின் தங்கத்தையும், மணல் தங்க தானியத்தையும் உருவாக்குவதாகும் என்று பதிவிட்டுள்ளார்.

Join our channel google news Youtube