உணவை கூட எப்பிடி சாப்பிட வேண்டுமென்ற வரையறை இருக்குங்க! எப்படி சாப்பிடணும் தெரியுமா?

உணவு என்பது மனிதனுடைய வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். நாம் உயிர்வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்று, அதுபோல உணவும் அவசியமான ஒன்று தான்.

தற்போது, இந்த பதிவில் உணவை எவ்வாறு உண்ண வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

காலை உணவு

காலை உணவை எக்காரணத்தை கொண்டும் தவிர்க்க கூடாது. காலியில் நாம் சாப்பிடுவதை தவிர்க்கும் போது, நமது உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகிறது.

காலையில் இரண்டு அல்லது மூன்று இட்லிகளாவது சாப்பிட வேண்டும். காலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பது மிகவும் அவசியமான ஒன்று.

மதிய உணவு

மதிய உணவு நமது வயிற்றுப்பசிக்கு ஏற்றவாறு சாப்பிட வேண்டும். மதிய நேரங்களில் சாதம் சாப்பிடுவது மிகவும் நல்லது. சாதம், சாம்பார், ரசம் போன்ற உணவுகளை உண்ண வேண்டும். அப்பளம், ஊறுகாய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

இரவு உணவு

இரவில் சாப்பாத்தி, தோசை, இட்லி போன்ற மென்மையான உணவுகளை உன்ன வேண்டும். மைதா உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.