முதல் ஓவரில் ‘ஹாட்ரிக்’ விக்கெட்.! உலக சாதனை படைத்த இந்திய வீரர்.!

  • இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதன் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் உ.பி அணிகள் இந்துாரில் மோதின.
  • முதல் இன்னிங்சில் ம.பி அணி 230 ரன்கள் எடுத்தது, உ.பியை சேர்ந்த ரவி யாதவ் 28, ம.பி அணியில் அறிமுகம் ஆனார். தனது முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.

இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதன் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் உ.பி அணிகள் இந்துாரில் மோதின. முதல் இன்னிங்சில் ம.பி அணி 230 ரன்கள் எடுத்தது, உ.பியை சேர்ந்த ரவி யாதவ், ம.பி அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். இவர், தனது முதல் ஓவரில் 3,4,5-வது பந்தில் ஆர்யன், அன்கித், சமீரை அவுட்டாக்கி, ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். உ.பி அணி முதல் இன்னிங்சில் 216 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இரண்டாவது நாள் முடிவில் ம.பி. அணி இரண்டாவது இன்னிங்சில் 105/3 ரன்கள் எடுத்து 119 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இதையடுத்து முதல் தர அறிமுக போட்டியில் முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என உலக சாதனை படைத்தார் ரவி யாதவ். இதற்கு முன் இந்தியாவின் ஸ்ரீநாத், சலில் அங்கோலா, அபிமன்யு மிதுன் உள்ளிட்ட 7 இந்திய வீரர்கள் அறிமுக போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினர். சர்வதேச அளவில் தென் ஆப்ரிக்காவின் ரிக்கி பிளிப், 1939-40ல் முதல் 3 போட்டியில் பவுலிங் செய்யவில்லை. 4-வது போட்டியில் முதன் முறையாக பந்து வீசிய ஓவரில் இதுபோல சாதித்தார். மற்றபடி, அறிமுக போட்டியில், முதல் ஓவரில் அசத்தியது ரவி யாதவ் மட்டும் தான் என குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்