காவல்துறையினருக்கு ‘ஷாக்’ கொடுத்த ஹரியானா அரசு.! உடல் எடை மிக முக்கியம்….

அதிக எடை கொண்ட ஹரியானா காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்படும் என ஹரியானா அரசு அறிவிப்பு.

ஹரியானாவில் அதிக எடை கொண்ட காவல்துறையினர் களப்பணியில் அமர்த்தப்படமாட்டார்கள் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. காவல்துறையினர் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரும் வரை காவலில் நிற்க வைக்கும் பணிக்கு மாற்றப்படுவார்கள் என்று ஹரியானா மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் அறிவித்துள்ளார்.

குற்றங்களை  காவலர்களின் உடற்தகுதி மிகவும் முக்கியமானது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பல போலீஸ்காரர்கள் உடல் எடை காரணமாக தங்கள் பணிகளைச் செய்ய முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், அதிக எடை கொண்ட காவல்துறையினர் களப்பணியில் அமர்த்தப்படமாட்டார்கள் என்றும் அதிக எடை கொண்ட ஹரியானா காவல்துறையினருக்கு காலை 5.30 மணி முதல் 6.15 மணி வரை பயிற்சி அளிக்கப்படும் எனவும் அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்