அனைத்து பணிகளிலும் பெண் அதிகாரிகளை இணைத்த இந்திய விமானப்படை..! ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராட்டு..!

By

President Droupadi Murmu

அனைத்து பணிகளிலும் பெண் அதிகாரிகளை இணைத்ததற்காக இந்திய விமானப்படையை ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராட்டியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே துண்டிகலில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆய்வு செய்தார். அந்த விழாவில் பேசிய ஜனாதிபதி முர்மு, அனைத்து பணிகளிலும் பெண் அதிகாரிகளை இணைத்ததற்காக இந்திய விமானப்படையை பாராட்டினார்.

அவர் கூறுகையில், ஆயுதப்படைகள் பாதுகாப்புத் தயார்நிலையின் ஒருங்கிணைந்த கண்ணோட்டத்தை மனதில் கொள்ள வேண்டும். உயர்தொழில்நுட்பப் போரை எதிர்கொள்வதில் உள்ள சவால்கள் உட்பட ஒட்டுமொத்த பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, நமது விமானப்படை எப்போதும் தயாராக இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மேலும், இந்திய விமானப் படை இப்போது அனைத்துப் பணிகளிலும், பெண் அதிகாரிகளை இணைத்துக் கொண்டிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கணிசமான எண்ணிக்கையிலான பெண் போர் விமானிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது என்று கூறினார். இதற்கிடையில், அவர் சுகோய் 30 MKI போர் விமானத்தில் பறந்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.