Stalin President

இந்திய ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்… முதல்வர் ஸ்டாலின் ட்வீட்.!

By

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு இன்று பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத்தலைவரும், இரண்டாவது பெண் ஜனாதிபதியுமான திரௌபதி முர்மு இன்று தனது 65-வது பிறந்த நாளைக்கொண்டாடுகிறார்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது டிவீட்டில், மாண்புமிகு இந்திய ஜனாதிபதி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி பெற்று பொது வாழ்க்கையில் சிறந்து செயல்பட வாழ்த்துவதாக ட்வீட் செய்துள்ளார்.