ஆதிபுருஷ் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் போது, திடீரென திரையரங்கிற்குள் வந்த குரங்கு, ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு.
இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன் மற்றும் சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் இன்று 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சைஃப் அலி கான் வில்லனாக நடிக்கிறார், இதில் தேவதத்தா நாகே மற்றும் சன்னி சிங் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சர்ச்சைக்கும் எதிர்பார்ப்புக்கும் மத்தியில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தை காண பலரும் திரையரங்குக்கு குவிந்தனர். கலவையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு திரையரங்கில் அதிசயம் நடந்துள்ளது.

அட ஆமாங்க… ஆதிபுருஷ்’ படத்தின் காட்சியின்போது திடீரென திரையரங்கிற்குள் குரங்கு வந்து அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், ரசிகர்கள் அந்த குரங்கை பார்த்ததும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று ஆரவாரத்துடன் வரவேற்றனர். நெட்டிசன் ஒருவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், தியேட்டர் ஆடிட்டோரியத்தின் ஒரு துவாரத்தில் இருந்து குரங்கு ஒன்று ஆதிபுருஷ் திரையை நோக்கி பார்த்து கொண்டிருந்ததை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
????????
Hanumanji showers his blessings on #Adipurush‘s grand release at the theatres!#Prabhas pic.twitter.com/AMJ1l16s5p
— Suresh PRO (@SureshPRO_) June 16, 2023
ஏற்கனவே, திருப்பதியில் நடைபெற்ற இப்படத்திற்கான டிரெய்லர் நிகழ்வின் போது, ஹனுமானுக்கு மரியாதை செலுத்தும் வகையில் படம் திரையிடப்படும் ஒவ்வொரு திரையரங்கிலும் ஒரு காலி இருக்கையை விடும்படி படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி, பல திரையரங்குகளில் ஹனுமான் சாமி போட்டோவை வைத்திருந்தனர். அந்த புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், அந்த குரங்கு திரையரங்கிற்கு திடீரென வந்தது, உண்மையிலேயே ஹனுமான் வந்துவிட்டாரா என்று? அதிசயமாக பார்க்கப்படுகிறது.