,

அனுமன் கோவில் கட்ட தனது நிலத்தை நன்கொடையாக வழங்கிய முஸ்லீம் மதத்தை சேர்ந்த நபர்!

By

பெங்களூருவில், அனுமன் கோவில் கட்ட தனது நிலத்தை நன்கொடையாக வழங்கிய முஸ்லீம் மதத்தை சேர்ந்த பாஷா என்பவருக்கு கிராம மக்கள் சுவரொட்டிகள் அடித்து பாராட்டு தெரிவித்துள்ளனர். 

பெங்களூருவை சென்னைஹொஸ்கோட் அருகே இணைக்கும் நெடுஞ்சாலை அருகே ஒரு அனுமன் கோயில் உள்ளது. இந்த கோவில் மிகவும் சிறியதாக காணப்படுகிறது. இதனை அடுத்து, இந்த கோயிலை கட்டுவதற்காக எம்.ஜி.பாஷா என்னும் முஸ்லிம் நபர், தனது 1.5 குந்தாஸ் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கோவில் சிறியதாக இருப்பதால் பிரார்த்தனை செய்யும்போது மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே எனது நிலத்தில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்க முடிவு செய்தேன். எனது குடும்ப உறுப்பினர்களும் இதற்கு ஒப்புக் கொண்டனர். இது சமுதாயத்திற்கு உதவும் என நம்புகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

இந்த கோவிலின் அறங்காவலர், இதுகுறித்து கூறுகையில், கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். பாஷா முழுமனதுடன் கோயில் கட்டுமானத்திற்கு நிலத்தை நன்கொடையாக வழங்கினார். கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என தெரிவித்துள்ளார். மேலும், பாஷாவின் தாராள மனதை பாராட்டும் வண்ணம் அவருக்கு சுவரொட்டிகள் அடித்து, கிராமவாசிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.