கைகளில் ரத்து கறையுடன் ஹன்சிகா.! பர்த்டே தின ஸ்பெஷல் போஸ்ட்ர்.!

கைகளில் ரத்து கறையுடன் ஹன்சிகா.! பர்த்டே தின ஸ்பெஷல் போஸ்ட்ர்.!

  • simbu |
  • Edited by ragi |
  • 2020-08-09 15:36:44
நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மஹா படத்தின் புதிய போஸ்ட்ரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகை, ஹன்சிகா தற்போது நடித்து வரும் திரைப்படம் மஹா. இது ஒரு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாம். இந்த படம் ஹன்சிகாவின் 50வது படமாகும். இந்த படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலிலும், ஸ்ரீகாந்த் வில்லனாகவும் நடிக்கிறார். மேலும் சாயாசிங், நாசர், கருணாகரன் தம்பி ராமையா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். அதனையடுத்து மகத் மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் இந்த படக்குழுவினருடன் புதிதாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஜமீல் இயக்குகிறார். இவர் ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லட்சுமணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் ஹன்சிகா காவி உடை அணிந்து புகைப்பிடிப்பது போல் உள்ள தோற்றமாகும். மேலும் விமானியாக நடிக்கவிருக்கும் சிம்புவின் போஸ்ட்ரும் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. சிம்புவின் கதாபாத்திரம் கோவாவை சேர்ந்த ஒரு விமானியின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிகின்ற வேளையில் இருந்த போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் ஹன்சிகாவிற்கு பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஹன்சிகாவின் பிறந்தநாள் பரிசாக மஹா படக்குழுவினர் புதிய போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர். கைகளில் ரத்த கறையுடன் நிற்கும் ஹன்சிகாவின் அந்த போஸ்ட்ர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.  

Latest Posts

இன்றைய (29/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!
சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரு அணி அபார வெற்றி..!
போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது..!
#அடித்து நொறுக்கி கர்ஜித்த பெங்களூரு...அரண்ட பவுலர்கள்!
மும்பைக்கு 202 இலக்கு...அடித்து நொறுக்கிய பெங்களூரு!
டெல்லியில் குறையும் கொரோனா..இன்று 1,984 பேர் கொரோனா உறுதி.!
மாணவி சஷ்மிதா மாநிலத்தில் முதலிடம்!- தரவரிசை பட்டியல் வெளியீடு!-உதவி எண் அறிவிப்பு
கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா - முதல்வர் பினராயி விஜயன்
தமிழகத்தில் இதுவரை 5,30,708 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!
தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - தினகரன்