மாப்பிள்ளை திரைப்படத்தை தொடர்ந்து தனுஷுடன் இணையும் ஹன்சிகா..!

தனுஷுக்கு ஜோடியாக 9 வருடங்கள் கழித்து மீண்டும்  ஹன்சிகா மோத்வானி ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது இந்த படத்தை தொடர்ந்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் , அடுத்ததாக இயக்குனர் மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளார், மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக 9 வருடங்கள் கழித்து ஹன்சிகா மோத்வானி நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.