ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை- உ.பி  ஏ.டி.ஜி.பி..!

ஹத்ராஸ் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என உ.பி.  ஏ.டி.ஜி.பி பிரசாந்த் குமார் தெரிவித்தார்.

ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உ.பி ஏ.டி.ஜி பிரஷாந்த் குமார் , உயிரிழந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்று அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இளம்பெண் இறந்துவிட்டார் என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. மேலும், எஃப்எஸ்எல் அறிக்கை மாதிரிகளில் விந்தணுக்களைக் கண்டுபிடிக்கவில்லை.

இது முற்றிலும் தவறான தகவல்களில் சாதி பதற்றத்தை உருவாக்க ஒரு சதி எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. சாதி பதற்றத்தை உருவாக்க தவறான தகவல்களை பரப்ப முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் கடந்த மாதம் 14-ம் தேதி புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது, இளைஞர்கள் 4 பேர் அந்த இளம் பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கடுமையாக தாக்கியும்,  நாக்கை வெட்டியதாகவும்  தெரிகிறது.

பலத்த காயங்களுடன் அந்த அப்பெண் மீட்கப்பட்டு ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அந்த பெண் மாற்றப்பட்டார்.

இதைத்தொடர்ந்து,  இரண்டு வாரங்களாக  உயிருக்கு போராடி வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.