ஹத்ராஸ் வழக்கு – எஸ்.பி., டி,எஸ்.பி., இன்ஸ்பெக்டர் கூண்டோடு சஸ்பெண்ட்!யோகி உத்தரவு

ஹத்ராஸ் வழக்கு – எஸ்.பி., டி,எஸ்.பி., இன்ஸ்பெக்டர் கூண்டோடு சஸ்பெண்ட்!யோகி உத்தரவு

ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு  தொடர்பாக எஸ்.பி., டி,எஸ்.பி., இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து உ.பி. அரசு  உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது பலத்காரம் செய்யப்பட்டார்.மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே எரித்து தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இச்சம்பவம் தொடர்பாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாட்டையே இச்சம்பவம் அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில்  பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு டெல்லியில் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர் இந்நிலையில் இச்சம்பவம் அனைவர் இடத்திலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்

ஹாத்ராஸ் பெண் மீதான பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இடைநீக்கம் செய்து அம்மாநில முதல்வர் யோகி அதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உ.பி.அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை அம்மாநில முதல்வர் யோகி எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.



author avatar
kavitha
Join our channel google news Youtube