ஹேக்கர்ஸ் ஊடுருவதால் அப்டேட் செய்ய வேண்டும் – வாட்ஸ் அப் நிறுவனம் அறிவிப்பு

உலகில் உள்ள மக்கள்  அனைவரும் சமூக வலைத்தளங்களுக்கு  அடிமையாக மாறி உள்ளனர். இவர்கள் அதிகம் பயன்படுத்தப்படுவது  வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், போன்ற செயலிகள். மக்களின் மூன்றாவது கைகளாக மாறிவிட்டது செல்போன்கள்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் ஆப் இந்த செயலின் மூலம்  செய்திகள் ,வீடியோ , புகைப்படங்கள் போன்றவை பிறருக்கு அனுப்பும் வசதி உள்ளது.மேலும் இந்த செயலில் வாய்ஸ் காலிங்,  வீடியோ காலிங், போன்ற பல வசதிகள் இருப்பதால் இந்த செயலியை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

இதனால் வாட்ஸ் ஆப் நிறுவனம் பாதுகாப்பு அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.இந்நிலையில் வாட்ஸ்அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவி வருகின்றனர். என தகவல் வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஹேக்கர்கள் சில பயனாளிகளை மட்டும் குறி வைத்து இது போன்ற செயலில் ஈடுபடுவதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது.

ஹேக்கர்கள் ஹேக் செய்ய வேண்டிய பயனாளிகளுக்கு  வாட்ஸ்அப்பில் அழைப்பு கொடுக்கிறார்கள். பின்னர்  கண்காணிக்கும் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப் படுகிறது.அதன் பின் அந்த பயனாளியின் செல்போன் அவர்களின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் பயனாளிகள் அனைவரும் உடனடியாக வாட்ஸ்அப் அப்டேட் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். சமீபத்தில் வாட்ஸ் அப் அப்டேட்டில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளதால் அதனை உடனடியாக பயணிகள் அப்டேட் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

 

 

author avatar
murugan

Leave a Comment