திருமயம் நீதிமன்றத்தில் ஆஜரானார் எச்.ராஜா…!

திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை திருமயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் மேடையமைத்து பேச காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து எச்.ராஜா போலீசாரையும்,  நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

இதுதொடர்பாக ஹெச் ராஜா மீது திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் இந்த வழக்கில் மூன்று ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் துரைசாமி, விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதனை அடுத்து இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  அதன் பின்னும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில் உயர்நீதிமன்றத்தில் துரைசாமி நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். இதனை அடுத்து, திருமயம் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

அதில் எச்.ராஜா தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் எச்.ராஜா முன்ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜராகியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.