மீண்டும் இணைந்தது வெற்றிமாறன் – ஜி.வி.பிரகாஷ்குமார் வெற்றிக்கூட்டணி!

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை வட சென்னை ஆகிய தரமான திரைப்படங்களை எடுத்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் ஆரம்ப படங்களில் இசையமைப்பாளராக இருந்தவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இடையில் வட சென்னை படத்திற்கு மட்டும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
இந்த கூட்டணி பிரிவிற்கு நடிகர் தனுஷ்தான் காரணம் என கோலிவுட்டில் முனுமுனுக்கப்பட்டது. அப்படி இருந்தும் அண்மையில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக வசந்தபாலன் இயக்கத்தில் நடிக்கும் ஜெயில் படத்தில் ஜி.வி இசையில் தனுஷ் ஒரு பாடலை பாடி இருவருக்கும் பிரச்சனை இல்லை என்பதை கோலிவுட்டிற்கு தெரியபடுத்திவிட்டார்.
இந்நிலையில் வடசென்னை படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் அசுரன் எனும் படம் தயாராக உள்ளது. இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த படத்தில் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ்  பணியாற்ற உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உறுதியான தகவல்களை பொறுத்திருந்து பார்ப்பேம்.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment