குலாப் புயல் நள்ளிரவு கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்!

வங்க கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் நள்ளிரவு கரையை கடக்கும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மத்திய வங்கக் கடலில் நேற்று முன்தினம் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த ஆறு மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறியது. இதனை அடுத்து இது மேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு வடக்கு ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும், கலிங்கம்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த புயல் கரையை கடக்கும் பொழுது 75 கிலோ மீட்டர் முதல் 85 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், இதனால் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal