குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் என்சிபி தலைவர் ரேஷ்மா ஆகியோருக்கு 3 மாத சிறை தண்டனை ..!

குஜராத் மாநிலத்தில் உள்ள தலித் சமுதாய மக்களுக்காக போராட்டங்களில் ஈடுபட்டு வருபவரும், எம் எல் ஏவுமாகிய ஜிக்னேஷ் மேவானி அவர்கள் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். கடந்த மாதம் இவர் இரு முறை கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியேறி உள்ளார்.

கோட்சேவுடன் பிரதமரை ஒப்பிட்டு பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியேறிய அன்றைய தினமே, பெண் காவலர் ஒருவரை தாக்கியதாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்த வழக்கில் இருந்து ஜாமினில் வெளியேறி உள்ளார்.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக ஜிக்னேஷ் மேவானி மற்றும் என்சிபி தலைவர் ரேஷ்மா படேல் 11 உள்ளிட்ட பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட 11 பேருக்கும் குஜராத் நீதிமன்றம் 3 மாத சிறை தண்டனை விதித்துள்ளது.