அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில், இன்று பிற்பகல் வாயு புயலானது கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, வாயு புயல் குஜராத் மாநிலத்தை தாக்க வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குஜராத் கடற்கரை பகுதிகளான வேராவல், போர்பந்தர் மற்றும் துவாரகாவை ஒட்டியே புயல் கடந்து செல்லக்கூடும் என்றும், கரையை கடக்கும் போது, பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.