தங்கள் மகனின் உயிரை காப்பாற்றும் ஒரு ஊசிக்காக இணையதளத்தில் 16 கோடி நிதி திரட்டிய குஜராத் தம்பதியினர்!

குஜராத்தில் உள்ள தம்பதியினரின் தங்களின் 5 மாத குழந்தைக்கு உள்ள அரிதான மரபணு கோளாறு சிகிச்சைக்காக போடப்படும் ஒரு ஊசிக்காக 16 கோடி ரூபாய் இணையதளம் வழியாக நிதி திரட்டி உள்ளனர்.

குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருபவர் தான் திரு ராத்தோட். இவரது மனைவி மற்றும் அவரது குழந்தைகளுடன் இவர் பஞ்ச் மஹால் மாவட்டத்திலுள்ள கோத்ரா நகரில் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு முதுகெலும்பு தசை குறைபாடு உள்ளதாம். இது மிகவும் அரிதான ஒரு மரபணு கோளாறாம். ஆனால் இந்த மரபணு கோளாறால் ஏற்பட்டுள்ள நோயை நீக்குவதற்கு ஒரு விலையுயர்ந்த ஊசி போடுவது மட்டுமே சிகிச்சை என கூறப்படுகிறது. எனவே பெற்றோர்கள் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு குழந்தையை அழைத்து சென்று பார்த்த பொழுது இந்த மரபணு கோளாறு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஊசி போடுவதற்கு 16 கோடி ரூபாய் வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து ராத்தோட் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து இணையதளம் மூலமாக நிதி திரட்ட துவங்கி உள்ளனர். அதாவது இந்த மரபணு கோளாறு காரணமாக முதுகு தசை குறைபாடு முதுகெலும்பு மற்றும் மூளை தண்டுகளில் உள்ள நரம்பு செல்கள் இழப்பு காரணமாக தசைகளின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலை ஏற்பட்டு குழந்தையின் தசை மிக பலவீனமாகவும் செயல்படும். இதன் மூலமாக சுவாசமும் கை கால் இயக்கமும் முற்றிலும் பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்த ஊசி அமெரிக்காவிலிருந்து இவர்களுக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வந்துள்ளது. ஊசியின் விலை குறித்து தம்பதியினரிடம் மருத்துவமனை நிர்வாகம் கூறியதும் தம்பதியினர் இணையதளம் மூலமாக இந்த 16 கோடி ரூபாய் நிதியும் திரட்டி தற்போது தங்களது குழந்தைக்கு மும்பை மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்துள்ளனர்.

விரைவில் தங்கள் குழந்தை நலம் பெறுவார் எனவும் இவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இப்படி ஒரு அரிய மரபணு கோளாறு உள்ளதா என பலரும் வியக்கும் நேரத்தில் இந்த மரபணு கோளாறுக்கு போடக்கூடிய ஒரு ஊசி 16 கோடி ரூபாய் என வியக்கும் அளவிற்கு பலர் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இருப்பினும் பலர் இந்த குழந்தையின் வாழ்வுக்காக பணம் கொடுத்து உதவியுள்ளது மனிதாபிமானம் இன்னும் இந்த உலகத்தில் நிலைத்து இருக்கிறது என்பதை சுட்டிக்கட்டும் விதமாகவும் இருக்கிறது.

author avatar
Rebekal