3 நாட்களில் 7 கண்டங்களுக்கு பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்த பெண்மணி!

3 நாட்களில் 7 கண்டங்களுக்கு பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்த பெண்மணி.

ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த டாக்டர் கவ்லா அல் ரோமைதி. இவர் ஏழு கண்டங்களுக்கு, 3 நாட்கள், 14 மணி நேரம், 46 நிமிடம் 48 வினாடிகளில் வேகமாக பயணித்துள்ளார். இவரது இந்த சாதனை பயணம் கின்னஸ் சாதனை படைக்க உதவி புரிந்துள்ளது. இந்த சிறப்பு வாய்ந்த பயணத்தின்போது அவர் அமைதி 208 நாடுகளையும், அதன் சார்பு பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுமார் 200 வெவ்வேறு தேசிய இனங்களை கொண்டுள்ளது. நான் அவர்கள் நாடுகளுக்கு சென்று, அவர்களின் கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளைப் பற்றி அறிய விரும்பினேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இது ஒரு கடினமான பயணம். குறிப்பாக விமான நிலையங்களில் அதிகமான பொறுமையுடன் இருக்கவேண்டும் என்றும், பல தரப்பட்ட விமான பயணங்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது என்றும், கின்னஸ் உலக சாதனை பட்டதை  பெற்றது, எனக்கும், எனது சமூகத்திற்கும் கிடைத்த முழுமையான மரியாதை என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.