பெரிய பப்புள்ஸில் 783 பப்புள்ஸ் செலுத்தி உலக கின்னஸ் சாதனை..வீடியோ உள்ளே ..!

சமீபத்திய ஒரு நபர் கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார். சாங் யூ-தே என்ற நபர் ஒரு பெரிய பப்புள்ஸில் உள்ளே சிறிய பப்புள்களை செலுத்தும் கவர்ச்சிகரமான வீடியோவை கின்னஸ் உலக சாதனை தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ மொத்தமாக 4 நிமிட கிளிப், எனவே… பல பப்புள்கள் பதிவு செய்யப்பட்ட வீடியோ என தலைப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பெரிய சோப்பு பப்புள்ஸ் ஒன்றிற்குள் சாங் யூ-தே ஊதுகிறார், அப்போது துல்லியமாக ஊதும் சாங் யூ-தே 783  சிறிய பப்புள்களை அந்த பெரிய பப்புள்களுக்குள் உள்ளே ஊதுகிறார். அந்த சிறிய பப்புள்கள் ஒவ்வொன்றும் அழகாக கீழே இறங்கிறது. இதனால் பெரிய பப்புள்ஸ் பல பொருட்களைக் கொண்ட ஒரு சிறிய பை போல தோற்றமளித்தது. அது மிகவும் அழகாக இருந்தது.

வீடியோவின் முதல் 2 நிமிடங்கள் ஒரு சாதனையை காட்டுகிறது. மேலும், அடுத்த  2 நிமிடங்கள் அவரது மற்றொரு உலக சாதனையை கட்டியுள்ளது. அது என்னெவென்றால் “ஒரு சோப்பு பப்புள்ஸை மிக அதிக முறை தட்டிய” என்ற சாதனையையும் யு-தே படைத்துள்ளார். ஒரு சோப்பு பப்புள்ஸை 290 முறை யு-தே தனது கையில் தட்டி குதிக்க வைக்கிறார். அவர் கையில் பப்புள்ஸை கவனமாகவும், நேர்த்தியாகவும் கையாளுவதை காணலாம்.

அவர் தனது கையில் ஒரு இளஞ்சிவப்பு கையுறை அணிந்திருப்பதைக் காணலாம். இதனால், அந்த பப்புள்ஸ் அவரது கையில் வெடிக்கவில்லை. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது. இது பேஸ்புக்கில் மட்டுமல்ல, பிற சமூக ஊடக தளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. சாங் யூ-தே  நீண்ட சுவாச வலிமையை பார்த்து பலர் ஈர்க்கப்பட்டனர். இதுகுறித்து பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் அவர் நுரையீரலில் நிறைய காற்று உள்ளது என தெரிவித்தார்.

மற்றோரு பயனர் பெரிய பப்புள்ஸில் உள்ளே சிறிய பப்புள்களை எவ்வாறு எண்ண முடிந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
murugan