செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

கடலூரில்,ஜெயக்குமார் என்ற இளைஞர் ஒருவர் மெல்லிய செம்பு கம்பியில் திருக்குறளை வடிவமைத்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

கடலூர் மாவட்டத்தின் கூத்தாப்பாக்கம் பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்ற இளைஞர் தனது 3 ஆம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்டார்.அதன் பின்பு,சிறு வயதிலிருந்தே சிறிய  கம்பிகளைக் கொண்டு தான் விரும்பிய வடிவத்தினை செய்து வந்தார்.

நாளடைவில் செம்பு கம்பியைக் கொண்டு கீ செயின்,டாலர்,பெயர்கள் போன்ற பல்வேறு பொருள்களை செய்து வந்தார்.இதனைத் தொடர்ந்து, தனது தீராத கலையின் ஆர்வத்தினால் இரண்டடி கொண்ட திருக்குறளை,எந்த வித இணைப்பும் இல்லாத ஒரே செம்பு கம்பியில் வடிவமைத்து சாதனைப் புரிந்துள்ளார்.

மேலும் ஜெயக்குமார்,திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் செம்பு கம்பியில் வடிவமைத்து கின்னஸ் சாதனை செய்யப் போவதாக  தெரிவித்துள்ளார்.ஜெயக்குமாரின் இத்தகைய முயற்சியை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.