கின்னஸ் சாதனை : ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகளாக வேலை பார்த்த 100 வயது முதியவர்..!

கின்னஸ் சாதனை : ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகளாக வேலை பார்த்த 100 வயது முதியவர்..!

ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகளாக வேலை பார்த்து, 100 வயது முதியவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.  

பிரேசில் நாட்டில் பிரஸ்ட் நகரை சேர்ந்தவர் வால்டர் ஆர்த்மன். இவருக்கு வயது 100. இவர் அங்கு உள்ள துணி உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் சாதாரண ஊழியராக வேலையில் சேர்ந்துள்ளார். பின் அவர் படிப்படியாக உயர்ந்து நிர்வாகப் பதவிக்கு வந்து தற்போது விற்பனை மேலாளராக உயர்ந்துள்ளார்.

ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகள் பணிபுரிந்த நூறு வயது வால்டர், தற்போது கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரிடம் இதுகுறித்து கேட்கையில் வாழ்க்கையில் நீண்ட காலம் நிறைவான தொழில் வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்தை கடைபிடிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நான் உண்மையிலேயே உப்பு, சர்க்கரை போன்றவற்றை தவிர்த்து ,உடலை காயப்படுத்தக்கூடிய பானங்களையும் தவிர்க்கிறேன். நல்லதை மட்டும் உட்கொண்டு உடலை எப்போதும் வலுவாக இருக்க செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube