சென்னையில் கடனை அடைப்பதற்காக சொகுசு காரை திருடிய காவலாளி!

சென்னையில் கடனை அடைப்பதற்காக சொகுசு காரை திருடிய காவலாளி!

சென்னையில் கடனை அடைப்பதற்காக சொகுசு காரை திருடிய காவலாளி.

பாலசுப்பிரமணீயம் என்பவர் சென்னையில், அண்ணாநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனியார் கூரியர் நிறுவனம் ஒன்றில்  நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அவர் பணிபுரியும் நிர்வாகம், ஒரு கோடி மதிப்புள்ள சொகுசு காரை வழங்கியுள்ளார். 

இந்நிலையில், இவரது வீட்டி அருகே உள்ள குடியிருப்பில் விஜய்ராம் காவலாளியாக பணியாற்றி வருகிறார். பாலசுப்பிரமணியம், விஜயராமை அவரது கார் ஓட்டுநர் வராத சமயங்களில், ஓட்டுநராக பயன்படுத்தி வந்துள்ளதகா கூறப்படுகிறது. 

இதனையடுத்து, கடந்த 29-ம் தேதி பாலசுப்பிரமணியத்தின் கார் களவு போனதையடுத்து, இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தா போது, காரை, விஜயராம் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை விசாரித்த போது, அவரது 2 லட்சம் கடனை அடைப்பதற்காக, இந்த காரை திருடி விற்க முயற்சித்தாக விஜயாராம் கூறியுள்ளார். மேலும், காரை பறிமுதல் செய்த போலீசார், காவலாளி விஜயராமை கைது செய்துள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube