GST வரி இனி 3 மாதத்துக்கு ஓரு முறை : சிறு தொழில்களுக்கு மட்டும்

ஆண்டு  1.5கோடி வரை சம்பாதிக்கும் சிறு தொழில் புரிவோர் இனி    3 மாதத்துக்கு ஒரு முறை தங்களது கணக்குகளை சமர்பித்தால் போதும் என மத்திய நிதி  அமைச்சர் அருண் ஜெட்லி  தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற 22-வது ஜி எஸ் டி கூட்டத்திற்கு பிறகு இதனை அவர் தெரிவித்தார். இனி காம்பினேசன் ஸ்கீம் எனப்படும் இணைக்க முறை திட்டத்தின் கீழ் ஆண்டு வருஆனம் 1கோடி க்கு கீழ் சம்பாதிக்கும் தொழிலாளர்களும் பயன்படுத்தலாம்.

தற்போது 75 லட்சம் ஆண்டு வருமானம் பெறுவோர் மட்டும் பயன் பெரும் வகையில் உள்ளது.
50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சரக்கு இறக்குமதிசெய்யும் போது அதை அரசு வலைதளத்தில் பதிவு செய்யும் E-WAY BILLING முறை வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறை படுத்தப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்தார்.
மேலும்  ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் நிதி  சிக்கல்களை சமாளிக்க தற்காலிகமாக வரியை திரும்ப செலுத்தும் முறை விரைவில் கொண்டு வரப்படும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment