#INDvENG : 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..! இங்கிலாந்து முன்னிலை..!

இங்கிலாந்து அணி 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 3-வது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, முதலில் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினார். ஆனால், கே.எல் ராகுல் ரன் எடுக்காமல் வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து, இறங்கிய இஷான் கிஷன் 4 ரன்களுடன் நடையை கட்டினார். பின்னர் இறங்கிய ரிஷாப் பந்த் 25, ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். இந்நிலையில், மத்தியில் இறங்கிய கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் விளாசி 77*ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.

இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தனர். 157 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் ஜேசன் ராய் 9 ரன்னுடன் வெளியேற பின்னர் இறங்கிய டேவிட் மாலனும் 18 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் அதிரடியாக விளையாடினர்.

சிறப்பாக விளையாடிய ஜோஸ் பட்லர் அரை சதம் விளாசி 83* ரன்கள் குவித்தார். மறுபுறம் ஜானி பேர்ஸ்டோவ் 40* ரன்கள் எடுத்து கடைசிவரை இருவரும் களத்தில் நின்றனர். இறுதியாக இங்கிலாந்து அணி 18.2 ஒவரில் 2 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால், இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

முதல் போட்டியிலும் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan