குழந்தைகளுக்கு ஏற்ற அட்டகாசமான காலை உணவு …! ஆலு பட்டூரா எப்படி செய்வது?

குழந்தைகளுக்கு ஏற்ற அட்டகாசமான காலை உணவு …! ஆலு பட்டூரா எப்படி செய்வது?

Default Image

குழந்தைகள் காலையில் தோசை, இட்லி, உப்புமா என எது செய்து கொடுத்தாலும் ஒரு நாள் சாப்பிடுவார்கள். மறுநாள் வேண்டாம் என ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால், காலை உணவு குழந்தைகளுக்கு தினமும் கொடுக்க வேண்டியது அவசியம்.

எனவே குழந்தைகளுக்கு விருப்பமான, குழந்தைகளை கவரக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நாம் குழந்தைகளுக்கு ஏற்ற காலை உணவு ஆலு பட்டூரா எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு
  • மைதா மாவு அல்லது கோதுமை மாவு
  • எண்ணெய்
  • உப்பு
  • சீரகம்

செய்முறை

கிழங்கு கலவை : முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். பின் இதனுடன் உப்பு மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும்.

மாவு உருண்டை : அதன் பின் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் மைதா அல்லது கோதுமை மாவு ஏதாவது ஒன்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி பூரி மாவு போல பிசைந்து எடுத்துக் கொள்ளவும். பின்பு இந்த மாவை உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஆலு பட்டூரா : இந்த உருண்டைகளை உருட்டி சற்று கனமான பூரிகள் போல தட்டி வைத்துக்கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் உருட்டி வைத்துள்ள பூரியை போட்டு பொரித்தெடுக்கவும். அவ்வளவு தான் அட்டகாசமான ஆலு பட்டூரா தயார். நிச்சயம் இன்று உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள்.

Join our channel google news Youtube