உசிலம்பட்டி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூதாட்டி கைது!

உசிலம்பட்டி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூதாட்டி கைது. மதுரை

By leena | Published: Jun 02, 2020 05:46 PM

உசிலம்பட்டி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூதாட்டி கைது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டம் என்ற கிராமத்தில், வீட்டில் பதுக்கி கஞ்சா விற்பனை செய்வதாக, அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, மாதுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில், தனிப்பிரிவு போலீசார் அல்லிகுண்டம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். 

அந்த ஆய்வில், அக்கிராமத்தில் வசித்து வரும் அய்யாக்காள் என்ற மூதாட்டி வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடம் இருந்து 600 கிராம் கஞ்சா மற்றும் ரூ.4,000 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், போலீசார் மூதாட்டியை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Step2: Place in ads Display sections

unicc