ஜெர்மனியிலிருந்து இந்தியா வரும் கிராண்ட்மாஸ்டர்.. ஆனால் சென்னை வருவதில் தாமதம்!

ஜெர்மனியிலிருந்து இந்தியா வரும் கிராண்ட்மாஸ்டர்.. ஆனால் சென்னை வருவதில் தாமதம்!

மூன்று மாதங்களுக்கு பிறகு செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாத ஆனந்த், சென்னை திரும்பவுள்ளார்.

ஜெர்மனியில் நடைபெற்ற பன்டேஸ்லிகோ செஸ் தொடரில் பங்கேற்க விஸ்வநாத ஆனந்த் சென்றார். அங்கு போட்டிகள் முடிந்த பின் அவர் இந்தியா புறப்பட இருந்தார். ஆனால் அந்த சமயம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது.

மேலும், ஜெர்மனியிழும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில், அவர் இந்தியா வரமுடியாமல் ஜெர்மனியிலே சிக்கினார். தற்பொழுது இந்தியாவில் விமான சேவை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு பிறகு விஸ்வநாத ஆனந்த இந்தியா புறப்பட்டார். ஜெர்மனியிருந்து டெல்லி வந்து, டெல்லியிலிருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் வரவுள்ளார். ஆனால் கர்நாடகாவில் வரும் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். இதனால் அவர் அங்கேயே தங்கி, 14 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்பவுள்ளார்.

Join our channel google news Youtube