குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக வரும் 26ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டியிருப்பது குறித்து உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் 73ஆவது குடியரசு தினம் நாளை மறு நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.