புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயண செலவை அரசே ஏற்கும் – எடியூரப்பா

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயண செலவை அரசே ஏற்கும் – எடியூரப்பா

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயண செலவை அரசே ஏற்கும்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால், வெளி மாநிலங்களில் தங்கி வேலை செய்தவர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர். 

இந்நிலையில், தற்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனையடுத்து, அவர்களின் பயண கட்டணத்தில் மத்திய அரசு 85 சதவீதத்தை ஏற்றுக்கொள்கிறது. 

இந்நிலையில், முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில்  “கர்நாடகத்தில் சிக்கியுள்ள வெளிமாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிற காரணங்களுக்காக வந்துள்ளவர்கள் சிரமிக் சிறப்பு ரெயிலில் சொந்த ஊருக்கு செல்வதற்கான செலவை மாநில அரசே ஏற்கும்” என பதிவிட்டுள்ளார். 

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube