இடைத்தேர்தல் வெற்றியால் அரசு நீடித்தது – கடம்பூர் ராஜு பேச்சு..!

இடைத்தேர்தல் வெற்றியால் அரசு நீடித்தது – கடம்பூர் ராஜு பேச்சு..!

2019-ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் 9 எம்.எல்.ஏ க்கள் கிடைத்த பின்னரே முதல்வர் ஆட்சி நிலையானதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் 2017-ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமி  தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால், அந்த ஆட்சி நிலையான ஆட்சியாக மாறியது, 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் பெற்ற வெற்றிக்கு பிறகுதான் எனவும் முதல்வர் தொடர்ந்து 2 ஆண்டுகள் நீடிக்கவும் இடைத்தேர்தல் வெற்றி என கூறினார்.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக, பாமக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. இதனால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி காரணம் பாமக என அக்கட்சி இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி வந்தார்.

தமிழகத்தில் முதல்வர் ஆட்சி நீடிக்கவே பாமக ஆதரவு தான் காரணம் என அக்கட்சியினர் கூறி வந்த நிலையில், அதற்கு ஏற்றாற்போல அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதிமுகவிற்கு பாமகவின் ஆதரவை கருதியே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதாக கூறப்படுகிறது.

author avatar
murugan
Join our channel google news Youtube