இது நாங்கள் படித்த அரசு பள்ளியா?… தத்தெடுத்த முன்னால் மாணவர்கள்… முதலில் 2 லட்ச ரூபாயில் சீரமைப்பு… முன்மாதிரியாக திகழும் முன்னால் மாணவர்கள்…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வள்ளாலபட்டி அரசு மேனிலைப் பள்ளி கடந்த 1961-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பள்ளியில், வள்ளாலபட்டியை சுற்றியுள்ள கிராமங்களான புலிப்பட்டி, வலையபட்டி, அழகர்கோவில்,செட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தற்போது படிக்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப்ப  இப்பள்ளியில் சுமார் 40 வகுப்பறைகள் உள்ளன. இதில், சில வகுப்பறைகள் பயன்படுத்த முடியாத அளவிற்க்கு மிகவும் சேதமடைந்திருந்தது. இதை அறிந்த முன்னாள் மாணவர்களான 1991 மற்றும் 1993-ம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவர்களில் பலர் தற்போது, ஐஏஎஸ், ஐஆர்எஸ் மற்றும் டாக்டர், இஞ்ஜினியர் மற்றும் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட உயர் பதவிகளில்  பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அவர்கள் பள்ளியின் நிலைமையை அறிந்து  தாம் படித்த பள்ளியை மேம்படுத்த வேண்டும் என முடிவெடுத்தனர்.மேலும் பள்ளியை தத்தெடுத்து மேம்படுத்த முடிவெடுத்துள்ளனர். அதற்காக  முதல் கட்டமாக ரூ. 2 லட்சம் மதிப்பில் சேதமடைந்த வகுப்பறைக் கட்டிடங்களைச் சீரமைக்க முடிவு செய்தனர். இந்நிலையில், சீரமைப்புப் பணிகள் முடிந்து புதுப்பிக்கட்ட கட்டிடங்களை ஒப்படைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இந்த சீரமைப்பு நிகழ்ச்சியின்  போது அப்பபள்ளியின் தலைமைஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். மேலும்,  முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் அல்லாரைசல் மற்றும் முன்னாள் மாணவர்கள் வழக்கறிஞர் கண்ணன், முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த விழாவில், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் மகேந்திரன், உதவிதலைமை ஆசிரியர் வாசிமலை, கல்விக்குழு தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் சங்கரலிங்கம், மனோகரன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளைs செய்தனர்.

Kaliraj

Recent Posts

ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க! விஜய் ஆண்டனி வேதனை!

Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…

26 seconds ago

தோனி என்ன வெளியே போனு சொல்லிட்டாரு – தமிழக வீரர் ஜெகதீசன் !!

Narayan Jagadeesan : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் வர்ணனையின் போது நாராயண் ஜெகதீசன், தோனியுடனான ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்திருந்தார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

5 mins ago

வாக்கு சதவீதத்தில் குளறுபடி… தமிழ்நாடு அறிவித்ததை குறைத்து அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்!

Election2024: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், வாக்கு சதவீதத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,…

33 mins ago

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி- ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…

4 hours ago

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

11 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

13 hours ago