ஆட்டோ துறைக்கான உற்பத்தியை அதிகரிக்க 26,000 கோடி ஒதுக்கீடு

மின்சார வாகனங்கள் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க, ஆட்டோ துறைக்கான 26,000 கோடி ஒதுக்கீடு .

இந்தியாவின் ஆட்டோ, ஆட்டோ உதிரிபாகங்கள் உற்பத்தித் திறனை மேம்படுத்த மற்றும் ட்ரோன் துறைக்காக  ரூ .26,058 கோடி ரூபாயை உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக  என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

பிஎல்ஐ திட்டம் இந்தியாவில் மேம்பட்ட வாகன தொழில்நுட்பங்களின் உலகளாவிய விநியோகச் சங்கிலியை ஊக்குவிக்கும்.இது 7.6 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கான கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்க உதவும்.

ரூ. 26,058 கோடி மதிப்புள்ள ஊக்கத்தொகை ஐந்து ஆண்டுகளுக்கு தொழில்துறைக்கு வழங்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும்,பிஎல்ஐ திட்டம் ஐந்து ஆண்டுகளில் ரூ. 42,500 கோடிக்கு மேல் புதிய முதலீடுகளையும், ரூ .2.3 லட்சம் கோடிக்கு மேலான உற்பத்தியையும் அதிகரிக்கும், என்றார்.

author avatar
Castro Murugan