வாரிசின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆளுநர்கள் அல்ல – ஆளுநர் தமிழிசை

ஆளுநர் பதவியை என்பது தகுதியை வைத்து தேர்வு செய்யப்படுகிறார்கள் என ஆளுநர் தமிழிசை பேட்டி. 

திமுக எம்பி கனிமொழி அவர்கள் நேற்று ஆளுநர் பதவி தேவையில்லாத ஒன்று என்றும், தமிழக ஆளுநர் காலாவதியானவர் என்றும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து புதுச்சேரி ஆளுநர் தமிழிசை அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசியுள்ளார். அவர் கூறுகையில் தமிழக ஆளுநர் காலாவதியானவர் என்று கருத்து சொல்வதை திமுக எம்பி கனிமொழி தவிர்க்க வேண்டும். மரியாதை கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் பலபேருக்கு உண்டு.

கருத்து கூறலாம் ஆனால் மோசமான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். ஆளுநர் பதவியை என்பது தகுதியை வைத்து தேர்வு செய்யப்படுகிறார்கள். வாரிசு அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் ஆளுநர்கள் அல்ல என தெரிவித்துள்ளார். மேலும், புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக கோப்பு வந்தால் ஒப்புதல் அளிப்பேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment