26 C
Chennai
Wednesday, November 25, 2020

ஆளுநரின் ஒப்புதல் காலம் கடந்த முடிவு – திருமாவளவன்

- Advertisement -
- Advertisement -

7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதலால்  பயனேதுமில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் : 

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு இயற்றியது.இந்த சட்டம்  அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனால் உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

ஆளுநர் ஒப்புதல் தரவில்லை :

ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.இதனால் ஆளுநரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

முதலமைச்சர் ,அமைச்சர்கள் சந்திப்பு : 

முதலில் முதலமைச்சர் பழனிசாமி ஆளுநரை சந்தித்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.இந்த சந்திப்பிற்கு பின்னரும் எந்த பயனும் இல்லை.இதனைத்தொடர்ந்து, 7.5% இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஆளுநர் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக எந்த முடிவும் வெளியிடப்படாது” என்று  உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்தது.

ஆகவே 7.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநருடன் 5 அமைச்சர்கள் சந்தித்தனர்.இதன் பின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  பேசுகையில்,  மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளதாக கூறினார்.

ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் : 

இதனிடையே அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விளக்கம் அளித்தார்.அதில், 7.5 % உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் தேவை. நீட் முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு மசோதா பற்றி அனைத்து கோணங்களிலும் ஆலோசிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

திமுக போரட்டம் : 

7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தி , திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக  ஆளுநர் இதுவரை ஒப்புதல் தராததால் உள்துறை அமைச்சகத்துக்கு திமுக எம்பிக்கள் கடிதம் எழுதினார்கள்.

அரசாணை வெளியிட்ட தமிழக அரசு : 

நேற்று  தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசாணையை வெளியிட்டது.சுமார் 40 நாட்களுக்கு  மேல் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

சுமார் 40 நாட்களுக்கு  மேல் ஆளுநர்  இன்று ஒப்புதல் : 

இன்று (அக்டோபர் 30-ஆம் தேதி ) மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார்.

திருமாவளவன் கருத்து :

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் காலம் கடந்த முடிவு.பயனேதுமில்லை.இந்நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் (AIQ ) 15% வழங்க தமிழக அரசு மறுப்பதன் மூலமே ஓபிசி மாணவர்களுக்கான  50% குறித்தும் உடனே மையஅரசு கொள்கை முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Latest news

அசர வைக்கும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட கருவேப்பிலை குறித்து அறியலாம் வாருங்கள்

இந்தியர்கள் சாதாரணமாக ஒரு உணவு செய்தாலே அதில் கருவேப்பிலை இல்லாமல் இருக்காது. ஆனால் அந்த கருவேப்பிலையை நாம் உணவுடன் சேர்த்து உட்கொள்வதில்லை ஒதிக்கி கொட்டி விடுகிறோம். இந்த கருவேப்பிலையில் எவ்வளவு மருத்துவ நன்மைகள்...
- Advertisement -

மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளான ரூ.25 கோடி மதிப்பிலான சூப்பர் கார்.! காயங்களுடன் தப்பிய 17 வயதான யூஎஸ் யூடுயூபர்.!

அமெரிக்காவின் யூடுயூபர் கேஜ் கில்லியன் தனது தந்தையின் ரூ.25 கோடி மதிப்பிலான காரை மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார். அமெரிக்காவின் டல்லாஸை தளமாக கொண்ட தனியார் ஈக்விட்டி நிறுவனமான கிராஸ் ஈக்விட்டிஸின் நிறுவனர் டிம்...

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்: முதலிடத்தை இழந்த இந்தியா.. முன்னேறிய ஆஸ்திரேலியா!

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இருந்து இந்திய அணி பின்னடைவை சந்தித்து, இரண்டாம் இடத்திற்கு விரைந்தது. ஐசிசி கிரிக்கெட் தரவரிசைப்பட்டியல், புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தை தீர்மானிப்பர். அந்தவகையில் இந்திய அணி, முதல் இடத்தில...

ஆபத்திலும் அசால்ட்டாக விளையாடும் இளைஞர்கள்!

சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு படிப்படியாக உயர்ந்து வருகிற நிலையில், ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் இளைஞர்கள்.   இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் இணையதளம் எனும் வலையில் சிக்கி உள்ளனர் என்று தான்...

Related news