4 மாதம்.. கூடுதல் விளக்கம்.. ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பிய ஆளுநர்.!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கூடுதல் விளக்கம் வேண்டும் என கூறி தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். 

ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தங்கள் பணத்தை இழந்து மன உளைச்சல் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வது அவ்வப்போது நடந்து வருகிறது. இதனை தடுக்க ஆன்லைன் சூதாட்டத்திற்கு நிரந்ததர தடை விதிக்க தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் சட்ட மசோதாவை இயற்றியது.

இதற்கு ஒப்புதல் வழங்குவதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அவர் அதற்கு விளக்கம் கேட்டிருந்தார். அதன் பிறகு, தமிழக அரசு சார்பில் விளக்கம் அளித்து திருப்பி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், 4 மாதங்கள் கடந்தும், இன்னும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் நேற்று  மீண்டும் கூடுதல் விளக்கம் கேட்டு மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment