மீனவ பட்டதாரிகளுக்கு அரசு வேலை..!!

58

மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில்
சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளித்தல் தொடர்ப்பான அறிக்கையை மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டார் .

மாண்புமிகு அமைச்சர் (மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக
சீர்திருத்தம்) அவர்கள் 11.07.2017 அன்று சட்ட பேரவையில் அறிவித்ததில்
மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில
இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும்
மீனவ கூட்டுறவு சங்க கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாயத்தைச் சார்ந்த படித்த
20 பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய
குடிமைப்பணிக்கான போட்டித் தேர்வில் கலந்துக்கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி
அளித்திடும் ஒரு புதிய திட்டத்தினை செயல்படுத்துதல்,
விரும்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர்
நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில்
சேர்ந்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப
படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் இணையதளமான
றறற.கiளாநசநைள.வn.படிஎ.in லிருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
அல்லது விண்ணப்ப படிவத்தினை மேட்டூர் அணை மீன்துறை உதவி இயக்குநர்
அலுவலகத்திற்கு அலுவலக வேலை நாட்களில் நேரில் அனுகி விலையின்றி
பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் மீன்துறை இணைய தளத்தில் உள்ள விரிவான அரசு
வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மேட்டூர்
அணை மீன்வள உதவி இயக்குநர் அலுவலத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ
அல்லது நேரடியாவோ 05.10.2018 பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம்,
கொளத்தூர் சாலை,
மேட்டூர் அணை பூங்கா அருகில்,
மேட்டூர் அணை -1,
தொலைபேசி எண்.04298-244045

DINASUVADU