#BREAKING: ஓ.பி.எஸ் உடன் எந்த ஒரு கருத்து வேறுபடும் இல்லை – ஈபிஎஸ்..!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கின்றேன் என ஈபிஎஸ் தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைச்செயலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்,சென்னை மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர்களுடன் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, டெல்டா மாவட்டங்களுக்கு செல்கின்ற போது அந்த பிரச்சாரக் கூட்டத்திலேயே கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்ற கருத்தை நான் வலியுறுத்திக் குறிப்பிட்டேன்.

அது மட்டுமில்லாமல் திட்டம் நிறைவேற்ற வேண்டும் ஆந்திர முதலமைச்சருடன் தொடர்பு கொண்டு பேசிய இருக்கிறேன். பிரதமரை நேரில் சந்தித்து கோதாவரி- காவிரி திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். இது வரலாற்று சிறப்புமிக்க திட்டம், தமிழ்நாடு நீர் பற்றாக்குறை உள்ள  உள்ள மாநிலம், டெல்டா விவசாயிகளுக்கும், குடிப்பதற்கும் முழுமையான நீர் கிடைக்க வேண்டும் என்று சொன்னால் கோதாவரி -காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கின்றேன். நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே பரிசோதனை நிலையங்கள் 277 அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது 269 இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

இது போதாது பரிசோதனை மையத்தை அதிகரிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் கொரனோ பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டது. கொரோனா பாதிப்பு 4 மடங்கு அதிகரித்து உள்ளதால் பரிசோதனை அதிகரிப்பது அவசியம் என தெரிவித்தார். மேலும், ஓ.பி.எஸ் வீடு கிரக பிரவேச பூஜை இருந்த காரணத்தால் தான் இன்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. எங்களுக்குள் எந்த ஒரு கருத்து வேறுபடும் இல்லை என தெரிவித்தார்.

author avatar
murugan