ஓபிசி இடஒதுக்கீட்டில் உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் – கமல்ஹாசன்

ஓபிசி இடஒதுக்கீட்டில் உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் என்று  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, திமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று  விசாரணைக்கு வந்த நிலையில்,  அப்பொழுது இந்திய மருத்துவ கவுன்சிளின் வாதத்தை ஏற்க முடியாது எனவும், மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தர சட்டம் இயற்றலாமென தெரிவித்தது. மேலும் மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரிதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை என தெரிவித்தது. இது தொடர்பாக 3 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் எனவும், இட ஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக தடை இல்லை என தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தமிழக மக்களின் உரிமைகளைத் தாரை வார்த்துக் கொடுத்தே, தன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு, OBC இட ஒதுக்கீட்டில் உயர்நீதி மன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த அழுத்தம் தர வேண்டும்.சமூகநீதி காத்திட தாமதமோ,மேல்முறையீடோ இன்றி இட ஒதுக்கீட்டை இவ்வாண்டே செயல்படுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.