தமிழக அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது - தினகரன்

தமிழக அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது - தினகரன்

புதிய கல்விக்கொள்கையில் மாநில உரிமைகளுக்கு எதிரான அம்சங்களையும் தமிழக அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய கல்விக்கொள்கையில் மாநில உரிமைகளுக்கு எதிரான அம்சங்களையும் தமிழக அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது.மும்மொழிக்கொள்கையைப் போன்றே புதிய கல்விக்கொள்கையில் மாநிலத்தின்  உரிமைகளை பறிக்கின்ற அம்சங்களையும் பழனிசாமி அரசு அனுமதிக்கக்கூடாது ன்று கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா பாதிப்பின் வீரியம் குறையாமல் ஊரடங்கு தொடரும் நேரத்தில்  அவாரமாக புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பு ஏற்புடையதல்ல என்று ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.இது தொடர்பாக நாடாளுமன்றத்தில்   விரிவான விவாதம் நடத்தி, குறைகளைச் சரிசெய்து, அதன்பிறகே செயல்பாட்டுக்கு கொண்டு வருவது சரியாக இருக்கும். அப்படி வரும் போது குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி கட்டாயம் என்பதை 8-ஆம் வகுப்பு  தாய்மொழிக்கல்வி கட்டாயம்  என்று அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் முதன்மை மொழியாக தமிழும், உலக அளவிலான பயன்பாட்டிற்கு ஆங்கிலமும் கொண்ட இருமொழிக் கொள்கையே ஏற்றதாக இருக்கும்.மூன்றாவது மொழியைப் படிப்பது என்பதையே விரும்பினால் மட்டுமே  (Optional ) என்றிருக்க வேண்டும்.அப்படி மூன்றாவதாக ஒரு மொழியை படிக்க விரும்பினால் அது மாணவர்கள் விருப்பும் மொழியாகவே இருக்க வேண்டும்.ஆனால் " அந்த மூன்றாவது மொழி என்பது எந்தக்காலத்திலும் இந்தி அல்லது சம்ஸ்கிருதம் ஆக இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தமாட்டோம் " எனும் உறுதிமொழியைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் மத்தய அரசு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Latest Posts

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..!
"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது!"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி!!
கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!
28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..?
#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பேட்டிங் தேர்வு ! இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்
மும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது!
சீன பெண்ணுக்கு நேர்ந்த சிறிய சாலை விபத்து - CT ஸ்கேன் பார்த்து அதிர்ந்த பெண்!
#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,647 பேருக்கு கொரோனா.!
தீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!
தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது!