கொரோனா குறுந்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு.!

கொரோனா பரவலை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் குறுந்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா கொரோனா பரவல் இரண்டாவது அலை தீர்விதமாகி வருகிறது. தினந்தோறும் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, அனைவரும் கட்டாயம் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்று விகிதம் 2 முதல் 5 விழுக்காட்டிற்குள் பதிவாகிய சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோயம்பத்தூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், சேலம், திருவாரூர், திருப்பூர் மாற்று திருச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் குறுந்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா தொற்று அதிகமாக இருந்த காலகட்டத்தில் கடைப்பிடித்தது போன்று, மாவட்டத்தில் உள்ள பல்வேறு பணியாளர்கள் அனைவருக்கும் அவர்கள் செய்ய வேண்டிய பணிகளை குறிப்பிட்டு ஒதுக்கி செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 2,342 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

மேலும், தமிகழத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் கொரோனா பரிசோதனை மையங்களை அமைக்கவும், தேர்தல் பணி அலுவலர்கள் அடுத்த சில நாட்களில் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தலைமை அதிகாரி ராஜீவ் ரஞ்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்