நாகூர் தர்காவிற்கு 45 கிலோ சந்தன கட்டைகளை இலவசமாக வழங்க உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

நாகூர் தர்காவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை வழங்க உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுசூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், நாகூர் தர்கா இடைக்கால நிருவாக குழுவினரிடமிருந்து பெறப்பட்ட கடிதத்தில், 11-07-2021-ல் நடைபெறவிருக்கும், சின்ன ஆண்டவர் கந்தூரி மற்றும் ஜனவரி 2022-இல் நடைபெறவுள்ள பெரிய ஆண்டவர் கந்தூரி திருவிழாவிற்கு கடந்த ஆண்டுகளில் இலவசமாக சந்தனக்கட்டைகள் வழங்கப்பட்டது.

அதனைப்போன்று சிறப்பினமாக கருதி 45 கிலோ சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு விலையின்றி (இலவசமாக) வழங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், ஜூலை மாதம் நடைப்பெற்றுள்ள சின்ன ஆண்டவர் கந்தூரி திருவிழா மற்றும் ஜனவரி 2022ம் ஆண்டு நடைப்பெறவுள்ள பெரிய ஆண்டவர் கந்தூரி திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனகட்டைகளை இலவசமாக வழங்க உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்