இரண்டாம் கட்ட கொரோனா அலை வந்தால் அதை எதிர்கொள்ள அரசு தயார் – விஜயபாஸ்கர்!

இரண்டாம் கட்ட கொரோனா அலை வந்தால் அதை எதிர்கொள்ள அரசு தயார் யூன அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில மாதங்களாக கோர தாண்டவமாடி வந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளது என்று கூறலாம். இந்நிலையில் அரசும் கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் இரண்டு கோடி ரூபாய் செலவிலான 16 சிடி ஸ்கேன் கருவிகளுடன் கூடிய கொரோனா குணமடைந்ததற்குப்பின் சிகிச்சை பெறக் கூடிய வார்டுகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் திறந்து வைத்தார். திறந்து வைத்து பின் அந்த ஆய்வுகளை மேற்கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் முப்பரிமான முறையில் கொரோனாவுக்கு சிகிச்சை வழங்கப்படுவதாகவும் இதனால் 90 சதவிகிதம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் கொரோனாவில் இரண்டாம் கட்ட அலை தமிழகத்திற்கு வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.