நிவர் புயல்: மேலும் சில மாவட்டங்களுக்கு அரசு பேருந்து இயக்கப்படாது!

நிவர் புயல் தாக்கம் காரணமாக ஏற்படும் 7 மாவட்டங்கள் வழியாக செல்லும் பிற மாவட்டங்களுக்கும் அரசு பேருந்து சேவை ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்துக்கு கழகம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடும் சூறாவளிப் புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100 – 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும், 120 கி.மீ. வரையும் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், புயல் பாதிப்பு ஏற்படும் மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தியது.

இதன்காரணமாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையே இன்று மதியம் 1 மணி மறு உத்தரவு வரும் வரை பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தநிலையில், அந்த 7 மாவட்டங்கள் வழியாக செல்லும் பிற மாவட்டங்களுக்கும் அரசு பேருந்து சேவை ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்துக்கு கழகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் விழுப்புரம் வழியாக செல்லும் திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment