“அரசுப் பள்ளிமூடுவிழா”தனியார் பள்ளிக்காகவா..??ஆசிரியர் மன்றம் கேள்வி..???

“அரசுப் பள்ளிமூடுவிழா”தனியார் பள்ளிக்காகவா..??ஆசிரியர் மன்றம் கேள்வி..???

அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்காக மூடுவதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்  தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தினர்.

Related image

தமிழநாடு தொடக்ககல்வி ஆசிரியர் மன்றம் சார்பில் புதுக்கோட்டையில் முப்பெரும் விழா நடைபெற்றது இதில் அம்மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் மீனாட்சிசுந்தரம் இது குறித்து பேசியனார் எழுத்தறிவித்தவன் இறைவன் என்று கூறப்பட்டு வந்த ஆசிரியர்களைப் பார்த்து இன்றைக்கு இருக்கிற  தமிழக முதல்வர் எடப்பாடி  ஒருமையில் பேசுகிறார். அவரது துறையில் உள்ள அமைச்சர் கே.சி.வீரமணியும் டாஸ்மார்க்கில் இருந்து வரும் பணத்தில் தான் ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்குகிறோம் என்கிறார்.

Related image

ஆகவே இப்படி பண்பில்லாமல் பேசும் முதலமைச்சர், அமைச்சர் வீரமணியை கண்டித்து மாநிலம் முழுவதும் ஒரு நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இனியும் அவர்கள் அவ்வாறு பேசினால் வருகின்ற அக்டோபர் 4-ம் தேதி சிறு விடுப்பு போராட்டமும், அடுத்து நவம்பர் 27-ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டமும் நடத்த இருக்கிறோம்.

Related image

போராட்டத்தை ஆயத்தம் செய்யும் வகையில் அக்டோபர் 13 -ம் தேதி சேலத்தில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற உள்ளது.மாநாட்டில் தொழிற்சங்க தலைவர்கள்,மக்கள் மேல் அனுதாபம் கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் கலந்து கொள்கிறார்கள்.அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்காக மூடுவதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

DINASUVADU

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *