பதவி உயர்வுக்கு மகப்பேறு விடுப்பு தடையா?? -கோட் அதிரடி

அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வேதநாயகி என்கிற  முதுநிலை தணிக்கை ஆய்வாளராக பணியாற்றி வரும் அரசு பெண் ஊழியர் தனது பணிக்காலத்தில் மகப்பேறு விடுப்பில் சென்ற காரணத்தால் முதுநிலை கூட்டுறவு தணிக்கை ஆய்வாளராக 3 ஆண்டு பணிபுரியவில்லை எனக் கூறி பதவி உயர்வு பட்டியலில் என் பெயரை சேர்க்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இவ்விவகாரம்  தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வேதநாயகி  வழக்கு  தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர் தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டம் பிரிவு 12-ல் விடுமுறை  பதவி உயர்வுக்கு தடை அல்ல என்று குறிப்பிட்டு வாதிட்டார்.வாதத்தினை கேட்ட நீதிபதிகள், மகப்பேறு விடுப்பு காலத்தையும் பணிக்காலமாகவே கருதி அரசு பெண் ஊழியர்க்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று அதிரடியாக  உத்தரவிட்டனர்.

author avatar
kavitha