• மக்களவை தேர்தல் குறித்து விழிப்புணர்வை தூண்டும் வகையில் கூகுளின் அதிரடி முயற்சி.

மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகள் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பலரும் வாக்களிப்பதன் முக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இன்றைய நாகரீகமான உலகில், மக்கள் அதிகமாக ஈர்க்கப்ட்டுள்ள ஒரு விடயம் என்னவென்றால், அது சமூக வலைத்தளங்கள் தான். மக்கள் அதிகமான நேரத்தை இணைய தளங்களில் தான் செலவிடுகின்றனர்.

இந்நிலையில், வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், கூகுள் இணையதளம், தனது முகப்பு பக்கத்தில் புகைப்படத்தை மாற்றி உள்ளது. அந்த புகைப்படம். ‘ஒரு விரல் புரட்சி’ என்பதை குறிப்பிடும் வண்ணம் அமைந்துள்ளது.

இந்த புகைப்படம், மக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் பற்றி விழிப்புணவு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here