#breakingnews :என்ன ஆச்சு கூகுளுக்கு.? உலகம் முழுவதும் முடங்கியது யூடியூப், ஜிமெயில்

உலகம் முழுவதும் உள்ள யூடியூப் , ஜிமெயில் உள்ளிட்ட வலைத்தளங்கள் முடங்கியுள்ளன.

உலகின் முன்னணி நிறுவனமாக கூகுள் இருந்து வருகிறது.கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில்,கூகுள் டாக்குமெண்ட்ஸ்,பிளே ஸ்டோர், யூடியூப் உள்ளிட்டவை ஆகும்.ஆனால் தற்போது கூகுள் நிறுவனத்தின் யூடியூப் , ஜிமெயில்,கூகுள் டாக்குமெண்ட்ஸ் உள்ளிட்டவை முடங்கியுள்ளன. வீடியோ காட்சிகளை பகிரும் இணைய தளமான யூ டியூப் செயல்பட வில்லை  என்பதால் செல்போன்கள் மூலம் யூ டியூப்பை பயன்படுத்துவோர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சர்வர் கோளாறு காரணமாக முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.