#BREAKING: இந்தியாவில் 75,000 கோடி முதலீடு செய்யும் கூகுள்.! சுந்தர் பிச்சை அறிவிப்பு.!

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு 75,000 கோடி முதலீடு கூகுள் செய்ய உள்ளதாக சுந்தர் பிச்சை அறிவித்தார்.

இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியுடன், கூகுள் தலைமை இயக்குனர் சுந்தர்பிச்சை காணொலி மூலமாக கலந்துரையாடினார்.  இந்த உரைக்கு பின்னர், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில், இன்று காலை சுந்தர் பிச்சையுடன் உரையாடினேன்.

நாங்கள் பல விஷயங்கள் பற்றி பேசினோம். அதிலும், குறிப்பாக நாட்டின்  விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையை மாற்றுவதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினோம்.

 மேலும், டிஜிட்டல் துறைகளில் கூகுளின் பங்கு குறித்து கேட்டறிந்தேன் என மோடி பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு அடுத்த 5-7 ஆண்டுகளில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை இயக்குனர் சுந்தர் பிச்சை  தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

author avatar
murugan